பூமியை நோக்கி வரும் விண்கற்கள்: நாசா தகவல்

Share this :
No comments


பூமியை நோக்கி ஏராளமான விண்கற்கள் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு மேலே விண்ணில் பல கோடி விண்கற்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தற்போது பூமியை சுற்றியுள்ள புவியிர்ப்பு விசையில் விண்கற்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன.

இந்த விண்கற்கள் பூமியை நோக்கி விழும், இருந்தாலும் எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஆகஸ்டு மாதத்தில் வழக்கத்தை விட அதிக அளவிலான விண்கற்கள் பூமியை நோக்கி வருவது உண்டு. வருகிற புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் 2 மடங்கு அதிகமான விண்கற்கள் பூமியை நோக்கி வர இருக்கின்றன.

மணிக்கு சுமார் 400 விண்கற்கள் பூமியை நோக்கி வரலாம் என்றும், இரவு நேரத்தில் அதிக விண்கற்கள் எரிந்தபடி வருவதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment