பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு, எங்க வீட்டுப் பிள்ளை என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. அதேநேரம், எங்க வீட்டுப் பிள்ளை என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். அவரது படப்பெயரை விஜய் படத்துக்கு வைத்தால் போராட்டம்தான் என்று எம்ஜிஆர் ரசிகர்கள் அறிவித்திருப்பதோடு, வரும் 14 -ஆம் தேதி விஜய் வீட்டுமுன் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நடிகை அபர்ணா வினோத்தும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அபர்ணா வினோத் விஜய் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் படத்தின் பெயர், எங்க வீட்டுப் பிள்ளை என்று முன்பு குறிப்பிட்டிருந்தார். இப்போது அவரிடம் இது பற்றி கேட்டால், அது யாரோ டுபாக்கூர் உருவாக்கிய ட்விட்டர் பக்கம். அது என்னுடையதே இல்லை என்று பல்டியடிக்கிறார். மேலும், விஜய் படத்தின் பெயர் இதுதான் என்று நான் எங்கேயும் கூறவில்லை என்கிறார் சத்தியம் செய்யாத குறையாக.

என்னதான் படத்தின் பெயர்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவித்துவிட வேண்டியதுதானே.

எங்க வீட்டுப் பிள்ளை... டுவிட்டர் செய்தி டுபாக்கூர் என நடிகை விளக்கம்



நமது நாட்டில் வீடு, கடை, ஏடிம் என்று திருடி போரடித்து விட்டதோ என்னவோ.. தற்போது திருடர்கள் தங்களது அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் பணத்தை, போலீசுக்கே தெரியாமல் அசால்டாக திருடியுள்ளனர் கொள்ளையர்கள்.

சேலத்திலிருந்து சென்னைக்கு செல்லும் ரயிலில், ரிசர்வ் வங்கியின் பணம் கொண்டு வரப்பட்டது. பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியின், மேலே உள்ள ரயிலில் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் பணத்தைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால், எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.

அந்த கொள்ளையர்களை பிடிக்க ரயில்வே எஸ்.பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில், ரிசர்வ் வங்கியின் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அங்க தொட்டு.. இங்க தொட்டு.. கடையில ரிசர்வ் வங்கி பணத்தையே திருடிய கொள்ளையர்கள்




தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் IV பிரிவில் 5451 பணியிடங்கள் நிறப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் IV பிரிவில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு-3, நில அளவர், வரைவாளர் போன்ற பதவிகளில் 5451 பணியிடங்கள் நிறப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 8. www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.09.2016, தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_15_not_tam_grp_iv_services.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

குரூப் IV: 5451 பணியிடங்கள்



உலகின் மிகச்சிறந்த தேடுதளமான கூகுளின் பெண் அதிகாரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் கணக்கு மேலாளராக பணிபுரிந்து வந்தவர் இவர்.

பிரிஸ்டன் கிரமத்தில் தனது தாயுடன் வசித்து வந்த மார்கோட்டிக்கு வயது 27 ஆகும். இவர் சம்பவம் நடந்த அன்று வேலைக்கு சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாய் அவரது மொபைலுக்கு தொடர்கொண்டுள்ளார் ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து காவல் துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் மார்கோட்டி அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் மரக்கட்டைகளுக்கு இடையே எரிக்கப்பட்ட பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையின் படி அவரது தலை மற்றும் கால் பகுதிகள் நன்கு எரிந்துள்ளது.

குறைவான மக்களே வசிக்கும் அந்த கிராமத்தில் குற்ற செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குற்றவாளி யார் என்பதை தீவிரமாக காவல்துறை விசாரித்து வருகிறது.

மார்கோட்டியின் மரணம் குறித்து அவர் பணிபுரிந்த கூகுள் நிறுவனம் இரங்கள் தெரிவித்துள்ளது. அவரது இறப்பு செய்தி அவர்களுக்கு பேரதிர்ச்சியாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட கூகுள் நிறுவன பெண் அதிகாரி



பூமியை நோக்கி ஏராளமான விண்கற்கள் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு மேலே விண்ணில் பல கோடி விண்கற்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தற்போது பூமியை சுற்றியுள்ள புவியிர்ப்பு விசையில் விண்கற்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன.

இந்த விண்கற்கள் பூமியை நோக்கி விழும், இருந்தாலும் எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஆகஸ்டு மாதத்தில் வழக்கத்தை விட அதிக அளவிலான விண்கற்கள் பூமியை நோக்கி வருவது உண்டு. வருகிற புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் 2 மடங்கு அதிகமான விண்கற்கள் பூமியை நோக்கி வர இருக்கின்றன.

மணிக்கு சுமார் 400 விண்கற்கள் பூமியை நோக்கி வரலாம் என்றும், இரவு நேரத்தில் அதிக விண்கற்கள் எரிந்தபடி வருவதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பூமியை நோக்கி வரும் விண்கற்கள்: நாசா தகவல்



சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல தனியார் விமான நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்தில் சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்தில், சில குறிப்பிட்ட பாதைகளில் சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிப்பட்டுள்ளதாவது:-

ஆகஸ்டு 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கட்டனச் சலுகையில் புக்கிங் செய்துக்கொண்டு, ஆகஸ்டு 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த சலுகை மூலம் பயணம் செய்யலாம்.

உள்நாட்டு போக்குவரத்து கட்டணச் சலுகையாக ரூ:399க்கு விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. அகமதாபாத்-மும்பை, அமிர்தசரஸ்-ஸ்ரீநகர், மும்பை-ஐதராபாத், மும்பை-கோவா, கோவை-ஐதராபாத், பெங்களூரு-கொச்சி, பெங்களூரு-சென்னை ஆகிய வழிதடங்களில் மட்டும் கட்டணச் சலுகையில் பயணிக்கலாம்.

சர்வதேச போக்குவரத்து கட்டணச் சலுகையாக ரூ:2,999க்கு விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் துபாய்-டெல்லி மற்றும் துபாய்-மும்பை ஆகிய பாதகைகளில் மட்டுமே பயணம் செய்யலாம்.

ரூ:399க்கு விமான டிக்கெட்: சுதந்திர தினம் ஸ்பெஷல்



அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தன்னை திருமணம் செய்துகொண்டதாக போயஸ் கார்டனில் வேலை பார்த்துவந்த பிலால் என்பவர் கூறியதாக தகவல்கள் வந்தன.

இந்த செய்தியை உறுதிபடுத்தும் விதமாக சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இரண்டு இளம்பெண்கள் சசிகலா புஷ்பா மற்றும் பிலால் விவகாரம் குறித்து பேசியுள்ளனர்.

சசிகலா புஷ்பா தங்களை துன்புறுத்தியது, நிர்வாணமாக படுத்துக்கொண்டு கை, கால்களை அமுக்கி விட சொல்வது, அவரது கணவர் மற்றும் மகன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது என பல புகார்களை அவர்கள் கூறினார்.

இதில் பிலால், சசிகலா உறவை பற்றி கூறிய அவர்கள், சசிகலா புஷ்பாவுக்கு பிலால் தாலி கட்டினது உண்மைதான் என்றனர். மேலும், சசிகலா புஷ்பா, பிலால் சேர்ந்து தான் இருப்பாங்க. இதைப்பற்றி சசிகலாவின் முதல் கணவரான லிங்கேஸ்வரன் கேட்டால், இது என் தனிப்பட்ட விவகாரம்னு சசிகலா புஷ்பா கூறுவார்.

சசிகலா புஷ்பாவுடன் சேர்ந்து பிலாலும் தங்களை கொடுமை படுத்தியதாக கூறிய அவர்கள், நாங்க அப்பதான் தூங்க சொல்வோம், உடனே பிலால் வந்து, எங்களை எழுப்பி விட்டு போய் அக்காவுக்கு கை, கால் அமுக்கி விடுங்கனு சொல்வாறு என அடுக்கடுக்காக பல புகார்களை அந்த இளம் பெண்கள் கூறினர்.

பிலாலுக்கும் சசிகலா புஷ்பா மனைவிதான்: இரண்டு கணவர்களுடன் வாழ்ந்ததாக குற்றச்சாட்டு



இந்தியாவில் உள்ள வீடுகளில் ரூ:78,300 கோடி மதிப்பிலான பயன்படுத்திய பொருட்கள் உள்ளன என்று ஓ.எல்.எக்ஸ். நிறுவனம் ‘கிரஸ்ட்’ என்ற ஆய்வு நடத்தியன் மூலம் தெரிவித்துள்ளது.

பழைய, பயன்படுத்திய பொருட்களை விறப்னை செய்வதற்கும், வாங்குவதற்கும் இணையதளம் மூலம் வழி வகுத்து சேவையை வழங்கி கொண்டிருக்கிறது ஓ.எல்.எக்ஸ். நிறுவனம்.

பழைய பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய 'கிரஸ்ட்' என்ற ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாவது:-

அதிக அளவிலான பொருட்களை வாங்கி குவிப்பது அனைவரிடமும் பழக்கமாக மாறிவிட்டது. புதிய பொருட்கள் வாங்கிய சில நாட்களுக்குள்ளே சலிப்படைந்து விடுவதும், புதிய பொருட்களை மட்டுமே கையில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும், மனோபாவமும் தான் பழைய, பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய தூண்டுகிறது.

ஒவ்வொரு வீடுகளிலும் சராசரியாக பழைய பயன்படுத்திய 12 உடைகள், 14 சமையல் பாத்திரங்கள், 11 புத்தகங்கள், 2 மொபைல் போன்கள் மற்றும் 3 கைக்கடிகாரங்கள் தேங்கிக் கிடக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள வீடுகளில் ரூ.78,300 கோடி மதிப்பிலான பயன்படுத்திய பொருட்கள் தேங்கியுள்ளன. பழைய பொருட்களை வீடுகளில் தேக்கி வைப்பதிருப்பதில் டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.

வீடுகளில் உள்ள பயன்படுத்திய பொருட்களின் மதிப்பு ரூ:78,300 கோடி: ஓ.எல்.எக்ஸ். ஆய்வு தகவல்



ஈஷா மையத்தில் இருந்து தனது மகனை மீட்டுத்தர வேண்டும் எனக்கோரி திங்களன்று துத்துக்குடியை சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் இயங்கி வருகின்றது. ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.

தனது இருமகள்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ளவர்களுக்கு போதை வஸ்துகள் உட்கொள்ளவைப்பதும், மூளைச்சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்குவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.

இதனையடுத்து, ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார். யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மதுரை திருப்பாலையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் மகேந்திரன், சேவா என்கிற பெயரில் குழந்தைகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி குழந்தைகளை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும், அதனால் தனது மகன்கள் மனநல பாதிப்புக்கு உள்ளானதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரனை சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர். இதில் ஈஷா மையத்தில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுத் தரவேண்டும் என தெரிவித்திருந்தார்

இதுகுறித்து ஈஷாவில் மகனை பறிகொடுத்த தமிழ்ச்செல்வி கூறுகையில், "சிங்கப்பூரில் பணிபுரிந்த தனது மகன் ரமேஷ் என்பவர் அங்கு நடைபெற்ற ஈஷாவின் யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் கோவையில் உள்ள ஈஷா மையத்திற்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். இங்கு தனது மகனை மூளைச்சலவை செய்துள்ளதுடன் ஓரு விதமான மயக்க மருந்தும் கொடுத்துள்ளனர். தனது மகனை தனியாக பார்த்து பேச கூட ஈஷா யோகா மையத்தினர் விடுவதில்லை.

குறிப்பாக, ரமேசின் தாத்தா மற்றும் பாட்டி இறந்துபோனபோது கூட வீட்டுக்கு அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தற்போது தனது கணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவரை சந்திக்க கூட விடாமல் ஈஷா நிர்வாகத்தினர் மூளைச்சலவை செய்து தங்க வைத்து இருப்பதாகவும் தமிழ்செல்வி தெரிவித்தார்.

ஈஷாவிடம் இருந்து மகனை மீட்டுத் தாருங்கள்’ : தாய் கண்ணீர்



சேலத்திலிருந்து சென்னை புறப்பட்ட ரயிலில் கொண்டு செல்லப்பட்ட, ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்திலிருந்து நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்ட ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூ.342 கோடி பணம், பெட்டிகளில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. இதற்காக ஒரு தனி பெட்டியே ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது.

பொதுமக்களிடம் இருந்து பழைய நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு புதிய நோட்டுகளை கொடுக்கும். அப்படி பெறப்பட்ட பழைய நோட்டுகள்தான் அந்த ரயிலில் கொண்டு செல்லப்பட்டது.

சென்னை எழும்புரில், அந்த பணத்தை எடுத்துச் செல்ல அதிகாரிகள் சென்ற போது, ரயிலில் மேற்கூரையில் ஓட்டையிட்டு அங்கிருந்த பெட்டிகளை உடைத்து அதிலிருந்து பல கோடி பணம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

அதன்பின் ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள். இத்தனை கோடி பணத்தை கொண்டு வரும்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்யவில்லை. இதுவே கொள்ளையர்களுக்கு வசதியாக போய்விட்டது என்று தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ரயில் விருதாசலத்தில் ரயிலின் இன்ஜினை மாற்றுவதற்காக ஒன்றரை மணிநேரம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்குதான் இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று போலீசார் கருதுகிறார்கள்.

பணம் இருந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் சரியாக ஒருவர் உள்ளே நுழையும் அளவுக்கு ஓட்டையிடப்பட்டு பல கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு என்ன அதிகாரிகள் கணக்கிட்டு செய்து வருகின்றனர்.

ஆனால், கொள்ளையர்கள் இந்த திருட்டில் ஈடுபடும்போது, ரயில் நிலையத்தில் இருந்த ஒருவர் கூட கண்கானிக்கவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திறைமையான கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.342 கோடி; கொள்ளை போனது எவ்வளவு?



5 juveniles arrested under POCSO act in Madurai - What happened?



How did Chennai train robbery happen? - Full details




 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Indira 09-08-16 Raj Tv Serial Episode 122







Nagini 09-08-2016 - Sun Tv Serial Episode 38


Actress Shakeela Pay Homage To Actress Jhothylakshmi



Rajini Fans Reply to Negative Reviews



Hyderabad Star hotels banned Nayanthara? நயன்தாராவுக்கு ஸ்டார் ஓட்டல்களில் தங்க தடையா?







Moondru Mudichu 09-08-16 Polimer Tv Serial Episode 1186




 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Kanchana 09-08-16 Raj Tv Serial Episodse 280







Urave Uyire 09-08-16 Polimer Tv Serial Episode 335






Vijay Tv Serial Kalyanam Mudhal Kadhal Varai 09-08-2016 Episode 448



Unknown Facts about Pepsi Uma | Biography




 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Poovizhi Vasalile 09-08-16 Raj Tv Serial Episode 320



Shruti Haasan to marry with a Mumbai Business next year?



Yaanum Theeyavan Official Trailer | Ashwin Jerome, Raju Sundaram, Varsha | Prashanth G Sekar | Achu



Kabali (Original Background Score) | Rajinikanth | Pa Ranjith | Santhosh Narayanan | Jukebox



Pazha Karuppaiah Open talk about lingam ! Ultimate speech








Saravanan Meenakshi Vijay Tv Serial 09-08-16 Episode 1229



Sasikala Pushpa beaten and sexually tortured us | Maid complaint



Dharmadurai Audio Jukebox | Vijay Sethupathi, Tamannaah | Yuvan Shankar Raja








En Kanmani 09-08-2016 Polimer Tv Serial Episode 224









Solvathellam Unnmai 09-08-16 Zeetamil






 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Deivamagal Sun Tv Serial 09-08-16 - Episode 997