அங்க தொட்டு.. இங்க தொட்டு.. கடையில ரிசர்வ் வங்கி பணத்தையே திருடிய கொள்ளையர்கள்
நமது நாட்டில் வீடு, கடை, ஏடிம் என்று திருடி போரடித்து விட்டதோ என்னவோ.. தற்போது திருடர்கள் தங்களது அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் பணத்தை, போலீசுக்கே தெரியாமல் அசால்டாக திருடியுள்ளனர் கொள்ளையர்கள்.
சேலத்திலிருந்து சென்னைக்கு செல்லும் ரயிலில், ரிசர்வ் வங்கியின் பணம் கொண்டு வரப்பட்டது. பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியின், மேலே உள்ள ரயிலில் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் பணத்தைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால், எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
அந்த கொள்ளையர்களை பிடிக்க ரயில்வே எஸ்.பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில், ரிசர்வ் வங்கியின் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment