போலீஸ் விசாரணை முடிந்து ராம்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு

Share this :
No comments


சுவாதி படுகொலையில் கைது செய்யப்பட்டு, போலீஸ் விசாரனைக்கு உட்படுத்தப்பட்ட ராம்குமார் விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்ற அனுமதியுடன், கடந்த மூன்று நாட்களாக ராம்குமார் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ராம்குமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ராம்குமார் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வந்துள்ளன.

ராம்குமார் ஏற்கனவே மருத்துவமனையில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது போலீஸ் காவலில் இருக்கும் அவரிடம் விரிவான வாக்குமூலம் வாங்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

காவல் துறையில் வாக்குமூலம் அளித்த ராம்குமார், சுவாதியை தான் ஒருதலையாக காதலித்ததாகவும், தனது காதலை ஏற்காமல் தன்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினார் எனவும் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இன்றுடன் அவருடைய போலீஸ் காவல் முடிவடைவதால், அவரை, இன்று மாலை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வருகிற 18ஆம் தேதி மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்பின் அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments :

Post a Comment