சுவாதியை மிரட்டவே ரயில் நிலையம் சென்றேன் : ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்
சுவாதியை மிரட்டவே ரயில் நிலையம் சென்றேன். ஆனால் ஏதேதோ நடந்து விட்டது என்று ராம்குமார் வாக்குமூலம் கொடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் உள்ளார் ராம்குமார். இன்றுடன் அவருடைய போலீஸ் காவல் முடிவடைகிறது. ராம்குமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் ராம்குமார் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வந்துள்ளன.
வாக்குமூலம் அளித்த ராம்குமார், சுவாதியை தான் ஒருதலையாக காதலித்ததாகவும், தனது காதலை ஏற்காமல் தன்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினார் எனவும் தேவாங்கு போல இருக்கிறாய் என்றும் பொட்டப்பயல் என்று கூறியும் சுவாதி அவமானப்படுத்தியதாக ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சுவாதியை மிரட்டுவதற்காகவே நான் ரயில் நிலையம் சென்றேன். ஆனால், அவர் பேசிய விதம் என்னை மிகவும் கோபப்படுத்தியது. எனவே எனது பையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்தேன் என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment