ராம்குமாரை பொட்டப்பயல் என திட்டிய சுவாதி?
சுவாதி கொலை வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் உள்ளார் ராம்குமார். இன்றுடன் அவருடைய போலீஸ் காவல் முடிவடைகிறது. ராம்குமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் ராம்குமார் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வந்துள்ளன.
ராம்குமார் ஏற்கனவே மருத்துவமனையில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது போலீஸ் காவலில் இருக்கும் அவரிடம் விரிவான வாக்குமூலம் வாங்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
காவல் துறையில் வாக்குமூலம் அளித்த ராம்குமார், சுவாதியை தான் ஒருதலையாக காதலித்ததாகவும், தனது காதலை ஏற்காமல் தன்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினார் எனவும் கூறினார்.
தேவாங்கு போல இருக்கிறாய் என்றும் பொட்டப்பயல் என்று கூறியும் சுவாதி அவமானப்படுத்தியதாக ராம்குமார் கூறியுள்ளார். அதனால் சுவாதியை பழிவாங்க அவரது வாயில் வெட்ட வேண்டுமென்று எண்ணியதாக தெரியவந்துள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment