கண்டெய்னர்களில் இருந்த பணம் 500 கோடி அல்ல; 5 ஆயிரம் கோடி - ஸ்டாலின் புது குண்டு
திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட பணத்தின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சையில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், ”வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக பார்க்கும் கட்சி திமுக. அதிக உறுப்பினர்களுடன் ஆளும் கட்சியான பெருமையும், அதிமுக உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியான பெருமையும் திமுகவையே சாரும். திமுக தலைவர் கலைஞர் குறிப்பிட்டிருப்பதைப்போல் திமுகவின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரி பிடிக்கப்பட்டதாக செய்தி. அந்த லாரிகளில் ரூபாய் 570 கோடி இருந்ததாக செய்தி. ஆனால் கணக்கு பார்த்தால் ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி இருந்ததாக பரவலாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் விசாரணையின் இறுதியில் அதிமுகவின் தேர்தல் முறைகேடுகள் அனைத்தும் அம்பலமாகும்” என்றார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment