விபத்தில் இறந்தவரின் உடலின் மேல் வெள்ளை உருவம்; அவரது ஆத்மாவா???
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி நகரில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் எடுக்கப்பட்ட 'திகில் கிளப்பும்' புகைப்படம் இண்டெர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது. ஒருவர் மரணம் அடைந்ததும் அவரின் உடலில் இருக்கும் 'ஆத்மா' அந்த உடலை விட்டு வெளியேறும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது உண்மை என நம்பவைக்கும் அளவிற்கு ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. கென்டகியின் பவுல் கவுன்டியில் ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் படுகாயம் அடைந்து இறந்தார். கென்டக்கியின் மவுண்ட் ஸ்டெர்லிங்கை சேர்ந்த சவுல் வாஸ்க்வெஸ் என்பவர் விபத்துக்குள்ளான பகுதியை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் வெள்ளை உருவத்தை கண்டு அதை முகநூலில் பதிவு செய்துள்ளார். புகைப்படத்தில் விபத்துக்கு உள்ளான பகுதியில் ஆம்புலன்ஸ்கள் சூழ நிற்பது பதிவாகியுள்ளது உடன் ஆம்புலன்ஸ்களுக்கு மேலே வெள்ளையாக ஒரு உருவம் மிதப்பது போன்றும் பதிவாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் தோன்றும் வெள்ளை உருவமானது இறந்து போனவரின் ஆத்மா என்று முகநூலில் கருத்துக்களுடன் சேர்த்து பகிர்வும் நடந்துக் கொண்டிருக்கிறது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment