இணைய உலாவி(Browser) தேடுபொறி(Search Engine) இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

Share this :
No comments


இணைய உலாவி(Browser) என்பது இணையத்தில் பல்வேறு இணைய பக்கங்களை அனுகி உள்நுழைவு செய்வதற்காக நாம் உலாவருவதற்கு உதவும் ஒரு இணைய பயன்பாடாகும் இண்டர்நெட்எக்ஸ்ப்ளோரர், குகூள்குரோம், ஃபயர்ஃபாக்ஸ், சபாரி ஆகியவை மிகப்பிரபலமான நாம் அனைவரும் இணையத்தில் உலாவருவதற்கு பயன்படும் முக்கிய இணைய உலாவிகளாகும் இந்த இணையஉலாவிகளின் வாயிலாக நாம் விரும்பும் இணைய பக்கத்தினை அனுகி அதனுள் உள்நுழைவு செல்லமுடியும்
பொதுவாக நாமனைவரும் இணையத்தில் உலாவரும்போது குறிப்பிட்ட இணையதளம் குறிப்பிட்ட தலைப்பிலான கட்டுரைகள் குறிப்பிட்ட பொருட்கள் எங்கு உள்ளன என இணையத்தில் தேடிபிடித்து அறிந்து கொள்வதற்கு உதவுவதே தேடுபொறி(Search Engine) யாகும் கூகுள், பிங்க்,யாகூ ஆகியவை மிகப்பிரபலமான நாம் அனைவரும் இணையத்தில் தேடுவதற்கு பயன்படும் முக்கிய தேடுபொறிகளாகும் இந்த தேடுபொறிகளின் வாயிலாக நாம் விரும்புவது எதுவாக இருந்தாலும் இணையத்தில் தேடிபிடித்திடமுடியும் இவற்றுள் குரோம் எனும்இணையஉலாவிக்கு இயல்புநிலையில் கூகுள் தேடுபொறியும் ஃபயர் ஃபாக்ஸ் எனும் இணையஉலாவிக்கு இயல்புநிலையில் யாகூவும் பிணைக்கப்பட்டு நமக்கு பயன்படுகின்றன நாம் விரும்பினால் எந்தவொரு இணையஉலாவியிலும் வேறு எந்தவொரு தேடுபொறியையும் இணைத்து பயன்படுத்திக் கொள்ளமுடியும்

No comments :

Post a Comment