கபாலியை எதிர்த்து வென்ற ஜாக்கிசான்

Share this :
No comments


ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான படம் கபாலி. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. முன்னதாக கபாலி படம் வெளியிடும் தேதி அறிவித்ததும் மற்ற படங்கள் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் தள்ளிவைத்தனர். தமிழகம் மட்டுமின்றி சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் கபாலி வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது.

ஹாலிவுட்டில் சண்டைக்காட்சிகள் மூலம் புகழ்பெற்றவர் ஜாக்கிசான். இவருக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ரசிகர்கள் வட்டம் அதிகம். கடந்த 4 ஆண்டுகளாக அவரது படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் ஸ்கிப் டிராஷ் ( SKIP TRACE ) படமாவது வெற்றி பெறுமா என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இவர்களது இந்த கனவு உண்மையாகியது. கபாலி வெளியான அதே தேதியில் ஜாக்கிசான் படமும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூலை பெற்றது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் ஜாக்கியின் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் வின்ஸ்டன் சாவ. இவர்தான் கபாலி படத்திலும் மெயின் வில்லன். இந்த இரு படங்களீன் மூலம் இவர் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் பட்டியலில் இடம் பிடித்தார்.

ஸ்கிப் டிராஷ் திரைப்படம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் செப்டம்பர் 2 ம் தேதி வெளியாகிறது.

No comments :

Post a Comment