சருமம் மிருதுவாக்கும் சாக்லேட் ஸ்க்ரப்

Share this :
No comments
சாக்லேட் சுவை, ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அழகிற்கும் அற்புதம் செய்யும். முகப்பரு, வயதாகும் அறிகுறி ஆகியவற்றை மறையச் செய்யும். சாக்லேட் சுவை, ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அழகிற்கும் அற்புதம் செய்யும். 

முகப்பரு, வயதாகும் அறிகுறி ஆகியவற்றை மறையச் செய்யும். சருமத்தில் களையே இல்லையே என யோசிப்பவர்களுக்கு ஏற்ற ஸ்க்ரப் இதுதான். இந்த சாக்லெட் ஸ்க்ரப் எல்லா சருமத்திற்கும் ஏற்றது. 

இவற்றில் பாக்டீரியாக்களின் எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. இதனால் முகப்பருக்கள் மீது செயல் புரியும். இந்த ஸ்க்ரப் அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவற்றையும் அகற்றிவிடும். 

 தேவையான பொருட்கள் : 

பொடித்த சர்க்கரை - 1 கப் 

நாட்டுச் சர்க்கரை - 1 கப் 

புதினா எண்ணெய் - 2 டீஸ்பூன் 

கோகோ பவுடர் - 1 ஸ்பூன் 

ஆலிவ் எண்ணெய் - 1 கப் 

சர்க்கரை, கோகோ பவுடர், நாட்டுச் சர்க்கரை இவற்றை முதலில் கலந்து, இவற்றில் புதினா மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து, ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். 

இதிலுள்ள புதினா எண்ணெய் முகப்பருக்களை விரட்டும். கருமையை நீக்கிவிடும். சர்க்கரை சருமத்தை மென்மையாக்கும். கோகோ ஆழமாக சுத்தம் செய்து, இறந்த செல்களை அகற்றும். 

இந்த ஸ்க்ரப் வாரம் மூன்று முறை சிறிது எடுத்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து குளிக்கலாம். கிடைக்கும் பலன் அற்புதமானது. சருமம் மிருதுவாகி, எந்த வித தழும்புகளும் இல்லாமல் மிளிர்வதற்கு இந்த ஸ்க்ரப் உத்திரவாதம்.

No comments :

Post a Comment