கபாலி வெளியாகும் நாள் சம்பளத்துடன் விடுமுறை: தனியார் நிறுவனம் அதிரடி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ப.ரஞ்சித் இயக்கத்தில் வரும் 22-ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் கபாலி. உலகம் முழுவதும் இந்த திரைப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று கபாலி வெளியாகும் நாளில் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கபாலிக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளதால் திரைப்படம் வெளியாகும் நாளில் ஊழியர்கள் பலர் விடுமுறை எடுக்க கூடும் என்பதால் முன்னதாகவே விடுமுறையை அறிவித்து விட்டதாக அந்த தனியார் நிறுவன நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் ஊழியர்கள் திரைப்படத்தை காண இலவச டிக்கெட்டும் அளிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment