சத்தான சுவையான சாமை கார குழிப்பணியாரம்

Share this :
No comments
சாமையில் புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து முதலியன உள்ளன. சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. 

தேவையான பொருட்கள் : 

 சாமை அரிசி - 1/2 கப் 

சிவப்பு அரிசி - 1/4 கப் 

உளுந்து - 1/4 கப் 

வெந்தயம் - 1 டீஸ்பூன் 

கேரட் துருவல் - கால் கப் 

வெங்காயம் - 1 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

கடுகு - 1/4 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2 

உப்பு - தேவையான அளவு 

உ. பருப்பு - 1/4 டீஸ்பூன் 

கடலைபருப்பு - 1/4 டீஸ்பூன் 

 செய்முறை : 

* வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். 

 * சிவப்பு அரிசி, சாமை அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 

 * பின்னர் அந்த மாவை உப்பு போட்டு கரைத்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். 

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் துருவலை போட்டு 2 நிமிடங்கள் வதக்கிய பின் இந்த கலவையை மாவில் சேர்த்துக் நன்றாக கலக்கவும். 

* குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு மாவை பணியாரங்களாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும். * வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும். 

 * சுவையான சத்தான சாமை கார குழிப்பணியாரம் ரெடி.

No comments :

Post a Comment