நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி

Share this :
No comments
நெல்லிக்காய் மிகவும் சத்து நிறைந்தது. இதில் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் : 

 பெரிய நெல்லிக்காய் - 6, 

தயிர் - ஒரு கப், 

தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன், 

இஞ்சி - ஒரு சிறிய துண்டு, 

பச்சை மிளகாய் - ஒன்று, 

கடுகு - ஒரு டீஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிது 

கொத்தமல்லி - சிறிது 

எண்ணெய் - ஒரு டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் 

* நெல்லிக்காயை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். 

* நறுக்கிய நெல்லிக்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 

* ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதனுடன் அரைத்த நெல்லிக்காய் விழுது, கறிவேப்பிலை போட்டு நன்றாக கலக்கவும். 

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து நெல்லிக்காய் பச்சடியில் சேர்க்கவும். 

* சுவையான சத்தான நெல்லிக்காய் பச்சடி ரெடி.

No comments :

Post a Comment