அதிபர் சொன்னதை அப்படியே கடைப்பிடித்துக் "கலாய்க்கும்" பெலாரஸ் மக்கள்!
மின்ஸ்க்: வேலை என்று வந்து விட்டால், டிரஸ் கூடப் போடாமல் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்ய வேண்டும் என்று தெரியாத்தனமாக தனது பேச்சின்போது கூறி விட்டார் பெலாரஸ் அதிபர். இப்போது அவரை செமையாக ஓட்டி வருகிறார்கள் அந்த நாட்டில் தனியார் துறையில் பணியாற்றுவோர்.
நிர்வாண கோலத்தில் வேலை இடங்களில் இருப்பது போல புகைப்படம் எடுத்து டிவிட்டரிலும், பிற சமூக வலைதளங்களிலும் போட்டு வரும் அவர்கள் அதை #GetNakedAtWork என்றும் ஹேஷ்டேக் போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ சமீபத்தில் தனது நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஐடி தொழில்நுட்பங்கள், பணியில் ஏற்பட்டு வரும் புரட்சிகள், மாற்றங்கள், தனியார்மயமாக்கல் குறித்துப் பேசினார்.
அப்போது வேலை என்று வந்து விட்டால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். டிரஸ்ஸைக் கூட கழட்டிப் போட்டு விட்டு வியர்க்க விறுவிறுக்க வேலை பார்க்க வேண்டும் என்று அவர் பேசியிருந்தார்.
அவ்வளவுதான் ஓட்ட ஆரம்பித்து விட்டனர்.
பல்வேறு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஆண்களும், பெண்களும் நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்து அதை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போட்டு அதிபரைக் கலாய்த்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது #GetNakedAtWork என்று ஹேஷ்டேக் செய்யப்பட்டு வைரல் ஆகியுள்ளது.
Labels:
News
,
others
No comments :
Post a Comment