Monday, July 25, 2016

லட்சுமி ராமகிருஷ்ணனை ஏமாற்றிய கபாலி



கபாலி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 22ஆம் தேதி வெளியான படம் கபாலி. ஒரு பக்கம் வசூலில் சாதனை படைத்தாலும், மறுபக்கம், இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

ஏற்கனவே இயக்குனர் சமுத்திரக்கனி, “கபாலி ஏமாற்றத்தை தருகிறது என்றும், மோசமான திரைக்கதை என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் “கபாலி பார்த்தேன். கேளிக்கை இல்லை. இந்த படத்தில் நடித்துள்ள ‘மெட்ராஸ்’ பட நடிகர்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த படத்தின் மீது நிறைய நம்பிக்கை இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment