Monday, July 25, 2016

கமலுக்கு என்னாச்சு...? தொடரும் மருத்துவர்கள் கண்காணிப்பு



மாடிப்படியில் தவறி விழுந்த கமலுக்கு காலில் சின்ன அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், சில தினங்களில் அவர் வீடு திரும்புவார், ஒன்றரை மாதங்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் எனவும் கமலின் அண்ணன் சந்திரஹாசன் கூறியிருந்தார்.
ஆனால், ஒரு வாரம் கடந்தும் இன்னும் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில்தான் இருக்கிறார் கமல்.

எலும்பு முறிவு ஏற்பட்டதால் நடமாட முடியாது. பூரண ஓய்வும் தேவை. வீட்டிற்கு சென்றால், தொந்தரவுகள் அதிகம் என்பதால் இன்னும் சில தினங்கள் கமல் மருத்துவமனையில் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் கமல் வீடு திரும்ப உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment