மகிழ்ச்சி... கபாலி பார்த்த சோ ராமசாமியின் 'நறுக்' விமர்சனம்

Share this :
No comments


கபாலி படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், வசூலை பொறுத்தவரை ஒன்றுதான். படம் அனைத்து சென்டர்களிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது.

இந்நிலையில் தனது நெருங்கிய நண்பரும், அரசியல் ஆலோசகருமான சோ ராமசாமிக்கு படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காட்டினார் ரஜினி. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், வந்தால் அவர்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர் சோ ராமசாமி.

சோ ராமசாமிக்கு கபாலியை திரையிட்டதோடு, அவரது அருகில் அமர்ந்து படத்தைப் பார்த்தார் ரஜினி. இந்த திரையிடலின் போது தயாரிப்பாளர் தாணுவும் உடனிருந்தார்.
படத்தைப் பார்த்த சோ ராமசாமி, ரஜினியை வேறொரு கோணத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார் சுருக்கமாக. அத்துடன் படம் நல்லாயிருப்பதாக படக்குழுவினரையும் பாராட்டினார்.

No comments :

Post a Comment