இந்தியா முதல் ஈரான்வரை... 11 நாடுகளில் தயாராகும் சுந்தர் சி.யின் சங்கமித்ரா
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 -வது படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். இந்திய அளவில் அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த சரித்திரப் படத்துக்கு சங்கமித்ரா என்று பெயர் வைத்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை இந்தியா மட்டுமின்றி யுஎஸ், ஈரான், டென்மார்க், உக்ரைன் என 11 வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது ஸ்கிரிப்டை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
படத்துக்கான விமான செலவில் ஒரு படமே எடுக்கலாம் போலிருக்கே.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment