ரஷ்ய அதிபர் புடின் திடீர் மாயம்: மர்மம் நீடிப்பு

Share this :
No comments


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திடீரென மாயமாகியுள்ளது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன. அமெரிக்காவுக்கு எதிராக போரை தொடங்க அவர் ராணுவ அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் என்பது வரை இந்த வதந்திகள் போய்க் கொண்டு இருக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடந்த ஜூலை 1-ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி சுற்றுலாத்துறையுடன் தான் மேற்கொள்ள இருந்த சந்திப்பை தேதி குறிப்பிடாமல் புடின் ஒத்தி வைத்துள்ளார். இதையடுத்து, கடந்த புதன்கிழமை நடைபெற்ற நான்காவது சர்வதேச விளையாட்டு போட்டிகளில் புடின் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அதிலும் கடைசி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை. மேலும், இரும்பு மற்றும் சுரங்க நிறுவனத்தை புடின் சுற்றி பார்ப்பதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புடினின் உதவியாளர் கூறுகையில், ''விளாடிமிர் சர்வதேச அளவிலான வர்த்தக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்'' என்றார். மேலும், திங்கள்கிழமை முதல் அவர் மக்களின் பார்வைக்கு வெளிப்படுவார் என்று கூறினார்.

No comments :

Post a Comment