ஒருவரது உடலில் இரும்புச்சத்து அளவுக்கு அதிகமானால் சந்திக்கும் பிரச்சனைகள்!

Share this :
No comments


உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும் மற்றும் இரத்த சோகை ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே இரும்புச்சத்து ஒருவரது உடலில் அளவுக்கு அதிகமானால், கல்லீரல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரையிலான அபாயங்களை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா? எனவே ஒவ்வொருவரும் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க அன்றாடம் சரியான அளவில் மட்டும் இரும்புச்சத்தை எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு நாளில் 21 மிகி இரும்புச்சத்து அவசியம். சரி, இப்போது ஒருவரது உடலில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போம்.

இதய நோய்கள் உடலில் இரும்புச்சத்து அளவுக்கு அதிகமாக இருந்தால், அதன் காரணமாக திசுக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். இதனால் இதயம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்
கல்லீரல் பாதிப்பு அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து கல்லீரலில் உள்ள திசுக்களை பாதித்து, கல்லீரலில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். சில சமயங்களில் அதிகப்படியான இரும்புச்சத்து, கல்லீரல் புற்றுநோயை கூட உண்டாக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ் அதிகப்படியான இரும்புச்சத்து, எலும்பு உருவாக்கம் மற்றும் கால்சியம் உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தி, எலும்பு முறிவு, எலும்புகளின் அடர்த்தி குறைவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸை உண்டாக்கும்.

No comments :

Post a Comment