நம்முடைய தேவைக்கு Bitrix24 எனும் கட்டற்ற அலுவலக பயன்பாட்டுமென்பொருளை பயன்படுத்திகொள்க

Share this :
No comments


மருத்துவமனை அலுவலகம், சட்டஆலோசனை அலுவலகம், வீடுகளை வாங்கி விற்கும் அலுவலகம் என்பன போன்ற அலுவலகங்களை நிருவகிப்பதற்காக அதன் நிருவாகிகள் அதிக அல்லல்படவேண்டியுள்ளது அதனை தவிர்த்து எளிதாக இவ்வாறான அலுவலகங்களை மேலாண்மை செய்வதற்காக உதவவருவதுதான் Bitrix24 எனும் கட்டற்ற அலுவலக பயன்பாட்டுமென்பொருளாகும் இந்த மென்பொருளானது நம்முடைய அலுவலகத்தின் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், செயல்திட்டங்கள், திட்டமிடுதல், அலுவலக ஆவணங்கள் , தொடர்புகள், நேரநிருவாகம் போன்ற அனைத்தையும் மிகஎளிதாக கையாளுகின்றது இதனுடைய CRM , Quotes , Invoices , Product catalog , Email marketing , Sales reports ஆகிய கருவிகளை கொண்டு நம்முடைய அலுவலகத்தின் வாடிக்கையாளர்களை கையாளுமுடியும் .அதனைதொடர்ந்து இதனுடைய Employee profiles and directory ,Company structure ,Request and approval workflows ,Knowledge management ,Employee polling ,Company news and alerts என்பன போன்ற கருவிகளை கொண்டு நம்முடைய அலுவலகத்தின் ஊழியர்களை நிருவகிக்கமுடியும் மேலும் இதனுடைய Workgroups & Projects ,External users ,Todo lists ,Tasks and subtasks ,Repeating tasks and task templates ,Checklists ,Gantt chart என்பன போன்ற கருவிகளை கொண்டு நம்முடைய அலுவலகத்தின் செயல்திட்டங்கள் திட்டமிடுதல் போன்ற பணிகளை செம்மையாக செயற்படுத்திடமுடியும்
அதுமட்டுமல்லாது இதனுடைய Online storage (5GB to Unlimited),Your own private ‘Dropbox’,Online editing ,File sharing ,Download links ,File access rights ,Cloud-PC-Mac-iOS-Android sync ,Document approvals என்பன போன்ற கருவிகளை கொண்டு நம்முடைய அலுவலகத்தின் ஆவணங்களை பாதுகாப்பான வழிகளில் கையாளவும் பகிர்ந்துகொள்ளவும் தேக்கிவைத்திடவும் பயன்படுத்தி கொள்ளலாம்
கூடுதலாக இதனுடைய Clock-in /Clock-out ,Calendars ,Absence chart , Leave and time off requests, Work reports என்பன போன்ற கருவிகளை கொண்டு நம்முடைய அலுவலகத்தின் திட்டமிடுதலையும் நேரநிருவாகத்தையும் திறனுடன் கையாளமுடியும்
அதனோடு இதனுடைய Private social network,Instant messaging/group chat,Videconferencing ,Email server ,Call Center ,Mobile messaging என்பன போன்ற கருவிகளை கொண்டு நம்முடைய அலுவலகத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் ஆகிய அனைவருடனும் உடனுக்குடன் தொடர்புகொள்ளமுடியும்

No comments :

Post a Comment