Monday, August 1, 2016

பயன்பாட்டு மென்பொருட்களின் பதிப்புகளை கட்டுபடுத்திட உதவும் Mercurial எனும் கருவி



புதிய மென்பொருட்களை உருவாக்கியபின்னர் அதனை பல்வேறு மாறுதல்களை செய்து மேம்படுத்தி அவ்வப்போது புதிய பதிப்பாக வெளியிடுவர் அவ்வாறு ஒரே பயன்பாட்டு மென்பொருளின் புதிய மேம்பட்ட பதிப்புகளை வெளியிடும் அந்த மென்பொருளின் பதிப்புகளை கட்டுபடுத்தி நிருவகிப்பதற்கு Mercurial என்பது பேரளவு உதவியாக உள்ளது அதாவது ஒரே மென்பொருளை குழுவிலுள்ள வேவ்வேறு நபர்கள் தனித்தனியாக தேவையான குறிமுறைவரிகளை உருவாக்கியபின்னர் அவைகளை அந்த குறிப்பிட்ட மென்பொருளுடன் பிழை எதுவும் ஏற்படாமல் ஒருங்கிணைத்து இறுதி பயனை அடைவதற்கு இது பெரிதும் உதவிகரமாக உள்ளது இதன் பயனை பெறுவதற்காக முதலில் hg init create a reopsitory, hg clone option source(dest) என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திகொள்க இதனுடைய hgஎன்ற கட்டளையானது இதில் உள்ள கட்டளைகளின் பட்டியலை திரையில் காண்பிக்கின்றது மேலும் இதன் hgஎன்ற கட்டளையின் பட்டியலில் உள்ள hg log என்பது reopsitory யில் மாறுதலின் வரலாற்றை காண்பிப்பதற்குகம் hg status என்பது மாறுதல் செய்யபட்ட கோப்புகளின் பட்டியலை காண்பிப்பதற்கும் hg diff என்பது கடைசியானகட்டளைவரை யுள்ள மாறுதல்களை காண்பிப்பதற்கும் hgremove என்பது reopsitory யில் கோப்புகளை நீக்கம் செய்திடவும் hg qseriesஎன்பது பட்டியலான துனை கோப்புகளை காணவும் ,hgcat என்பது கோப்பினை எந்த பதிப்பை அச்சிடுவது எனகுறிப்பிடவும் பயன்படுகின்றன வாருங்கள் நம்முடைய புதிய மென்பொருள் உருவாக்கத்தின் போது அதனை நிருவகித்திட Mercurial என்ற பயன்பாட்டு கருவியை பயன் படுத்திகொள்க மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://www.mercurial-scm.org/wiki/ ,http://hginit.com/ ஆகிய இணைய தளங்களிற்கு செல்க

No comments:

Post a Comment