பெண்களை பாதிக்கும் சட்டங்கள்

Share this :
No comments
ஒவ்வொரு ஆண்டும் சொத்து சார்ந்த வழக்குகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதுமே பெண்களுக்கு என்று தனிச்சட்டங்கள் இருக்கின்றன. 

இருப்பினும் பெரும்பாலான சட்டங்கள் பெண்களை அடிமைப்படுத்தும் விதமாகவே உள்ளன. 18 வயதுக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு திருமணம் செய்து கொண்ட ஆணுக்கு சிறை தண்டனை கிடைக்கும். 

ஆனால், அந்த திருமணத்தை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியாது. அறியாத பருவத்தில் வரும் காதலில் சிக்கிய பெண் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுகின்றார். ஒவ்வொரு ஆண்டும் சொத்து சார்ந்த வழக்குகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். 

கற்பழிப்பு சார்ந்த வழக்குகளில் சாட்சியம் சரியாக இல்லாததால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். வரதட்சணை கொடுமையால் ஆண்டுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழக்கின்றனர். 

 உலகின் வளர்ந்த நாடான அமெரிக்காவில் கூட பெண்களுக்கு என விசித்திரமான சட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கணவன் மனைவியை அடிக்கலாம். ஆனால், அடிக்க பயன்படுத்தும் குச்சி சுண்டுவிரலை விட பருமனாக இருக்கக் கூடாது என்றொரு சட்டம் இருக்கிறது. 

தலிபான்கள் கால ஆப்கானிஸ்தானில், பெண்கள் நெயில் பாலிஷ் போடக்கூடாது. போட்டால் விரல்கள் துண்டிக்கப்படும். பர்தா அணியவில்லை என்றால் கசையடி. பர்தா அணியாத பெண்ணை ஏற்றி வரும் டாக்சி டிரைவருக்கு சிறை தண்டனை என பல சட்டங்கள் பெண்களுக்கு உண்டு. ஈரானில் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமலேயே ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். 

எதிர்த்து அந்தப் பெண் கோர்ட்டுக்கு சென்றால் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கிடைக்கும். விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு கிடைக்கும் ஜீவனாம்சத்திற்கு அளவுக்கு அதிகமான வரி கட்ட வேண்டும். 

இந்த வரிக்கு பயந்து பல பெண்கள் ஜீவனாம்சம் கேட்பதில்லை. இப்படி உலகம் முழுவதும் பெண்களை தாழ்த்தும் சட்டங்கள் அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ளன. 

ஆனால், பெண்களுக்கு பூர்வீக சொத்திலும், தந்தையின் சுய சம்பாத்தியத்திலும் சமபங்கு அளிக்கும் கட்டம் முதன்முதலாக தமிழகத்தில் 1989-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு 2005-ம் ஆண்டு அதே போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம் இந்தியாவில் பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு என்ற நிலை ஏற்பட்டது.

No comments :

Post a Comment