சுவையான சத்தான கம்பு - பச்சைப்பயறு புட்டு

Share this :
No comments
கம்பு, பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ள. இது இரண்டையும் வைத்து எப்படி புட்டு செய்வது என்று பார்க்கலாம். 

 தேவையான பொருட்கள் : 

கம்பு மாவு - ஒரு கப், 

முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப் தேங்காய்த்துருவல் - அரை கப், 

நெய் - ஒரு தேக்கரண்டி.  

செய்முறை: 

 * வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும். 

* கம்பு மாவில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறவும்.

 * புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, தேங்காய்த்துருவல் என்றபடி அடுத்தடுத்து அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கம்பு - பச்சைப்பயறு புட்டு தயார். 

* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த உணவு.

No comments :

Post a Comment