ஈஷா மைய பள்ளியில் குழந்தைகளை பைத்தியமாக்குகிறார்கள்: போலீஸ் ஏட்டு பரபர புகார்

Share this :
No comments

மதுரை: கோவையில் உள்ள ஈஷா மைய பள்ளியில் சிறுவர்களை பைத்தியமாக்குவதாக மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டு புகார் தெரிவித்துள்ளார். மதுரையில் போலீஸ் ஏட்டாக இருப்பவர் மகேந்திரன்.

அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் தனது இரண்டு மகன்களையும் கோவையில் உள்ள ஈஷா மைய பள்ளியில் சேர்த்தார்.

அந்த பள்ளியில் சிறுவர்களை பைத்தியமாக்குவதை அறிந்த மகேந்திரன் தனது மகன்களை அழைத்து வந்துவிட்டார். 

இது குறித்து அவர் கூறுகையில், பள்ளி குழந்தைகளுக்கு படிப்பை கற்றுத் தருவதை விட பிரம்மசரியத்தையே அதிகம் கற்றுக் கொடுத்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு உணவுக் கட்டுப்பாட்டுடன் வேலை பளுவும் உள்ளது. 

இதனால் அவர்கள் பைத்தியம் பிடித்தது போன்று உள்ளனர். தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் 500 தோப்புக்கரணம் போட வேண்டும். உடல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்தியதால் அவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குழந்தைகளுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் அளித்துள்ளனர் என்றார். தனது மகன்களுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஈஷா மைய கொடுமைகள் குறித்து புகார் தெரிவிக்க உள்ளார் மகேந்திரன்.

No comments :

Post a Comment