அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி - பூண்டு சட்னி
இஞ்சி - பூண்டு சட்னி பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்தாக பயன்படும்.
தேவையான பொருள்கள்
இஞ்சி, பூண்டு - தலா ஒரு கிண்ணம்,
பச்சை மிளகாய் - 12,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
* பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
* இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.
* சுருண்டு வரும்போது, இறக்கி வைக்கவும். கெடாமல் இருக்கும்.
* இது பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்து.
Labels:
recipes
No comments :
Post a Comment