என்னிடம் கவர்ச்சியாக நடிக்க கேட்பதில்லை
அறிமுகமான சிறிது நாளிலேயே விஜய், சூர்யா என்று முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். இத்தனைக்கும் மாஸ் நடிகர்களின் நாயகிகளிடம் எதிர்பார்க்கும் கவர்ச்சியை இவர் காட்டுவதில்லை.
கணுக்கால்வரை காஸ்ட்யூம் அணியும் இவர், தெலுங்குப் படங்களிலும் நடிக்கிறார். தெலுங்கு படவுலகுக்கு கவர்ச்சி உப்பு மாதிரி. அங்கு எப்படி தாக்குப் பிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்?
இந்த கேள்விக்கு பதிலளித்தவர், நான் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். தெலுங்கிலும் அப்படித்தான். அங்கு என்னிடம் யாரும் கவர்ச்சியாக நடிக்கும்படி இதுவரை கேட்டதில்லை என்றார். கேட்டாலும் கவர்ச்சிக்கு நோ தானாம். கீர்த்தி சுரேஷின் ஹோம்லி லுக் ஆந்திராவிலும் அவரை காப்பாற்றியிருக்கிறது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment