நாம் எல்லாருமே ஏதாவது ஒரு சமயத்தில் ஏதாவது ஒரு வலியால் அவதிப்படாமல் இருக்கவே முடியாது. தலைவலி, கால்வலி, கழுத்துவலி என தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.
இப்போது சிறு குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். உள்ளுறுப்புகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து அழுத்தம் தரக்கூடிய பாதிப்பு தந்தால், அங்கே திசுக்கள் பாதிக்கப்பட்டு வீக்கம், வலிகளை உண்டாக்குகிறது.
இன்னொரு முக்கிய காரணம் சரியான சூரிய ஒளி மற்றும் கால்சியம் சத்து கிடைக்காமல் இருப்பதும்தான். இப்போது எந்தெந்த வலிகள் எப்படி உண்டாகிறது அதனை எப்படி குணமாக்கலாம் என பாக்கலாம்.
மூட்டு வலி : மூட்டு வலிக்கும் பருவ நிலைக்கும் தொடர்பு உள்ளது. குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாவதை உணர்ந்திருப்பீர்கள். இதற்கு காரணம் அங்கே பாரோமெட்ரிக் அழுத்தம் மாறுபடுவதால் வலிகள் அதிகமாகிறது.
இந்த சமயங்களில் புதினா எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சூடுபடுத்தி முட்டுகளில் தடவினால், வலிகள் குறையும். போதிய அளவு ஓய்வு தர வேண்டும்.
முதுகு வலி : முதுகு வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதிக உடல் எடை, சரியான நிலையில் அமராமலிருப்பது, தவறான நிலையில் தூங்குவது என பல காரணங்கள் உண்டு. முதுவலி வந்தவர்கள் ஏதாவது சிறு சிறு வேலைகள் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.
நீண்ட நேரம் ஓய்விருந்தால் முதுவலி ஆரம்பித்துவிடும். சின்னசின்ன வேலைகள் உடலுக்கு தரப்படும்போது, முதுவலி குறையும். உடற்பயிற்சி, ப்ரத்யோக யோகா ஆகியவைகளும் பலன் தரும்.
கால் வலி : கால் குடைச்சலால் பெரும்பாலோனோர் அவதிபப்படுவார்கள். அதுவும் மழைக்காலத்தில் அதிக பிரச்சனைகளை தரும். வாய்வு பிடிப்பினாலும் கால்வலிகள் வரலாம்.
ஆனால் விரைவில் சரியாகிவிடும். நரம்புகள் பலவீனம்டைந்தாலும், கால்சியம் சத்து குறைவாக இருந்தாலும், கால் வலி தொடர்ந்து இருக்கும். இரவுகளில் மிக அதிகமாய் வலிக்கும். அந்த சமயங்களில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளும், மசாஜும் நல்ல பலன் தரும்.
இவையெல்லாம் சாதாரணமாக எல்லாருக்கும் ஏற்படுவது, வந்தபின் குணமாகிவிடும்.
ஆனால் நாள்பட்ட வலிகளை அலட்சியம் கொள்ள வேண்டாம். ஏனெனில் இது வேறு ஏதாவது நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்,. எனவே காலம் தாழ்த்தாமல் மருத்துவரை நாட வேண்டும்.

No comments:
Post a Comment