குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான டிபன் இது.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூரணத்துக்கு:
உளுந்து - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* கோதுமை மாவை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
* ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்துக் வெந்ததும் உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
* அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல் செய்து உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும்.
* தோசைக்கல் சூடானதும் சப்பாத்திகளை போட்டு வேகவைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான உளுந்து சப்பாத்தி ரெடி.
* இந்த சப்பாத்தியில் உளுந்து பூரணத்தை வைத்து செய்வதால், புரதச்சத்து அதிகமாகக் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான டிபன் இது.

No comments:
Post a Comment