அறை வாங்கிய திருச்சி சிவா; கருணாநிதியிடம் நேரில் விளக்கம்!
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி.திருச்சி சிவாவை அதிமுக பெண் எம்.பி.சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து திருச்சி சிவா திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை கூறியுள்ளார்.
அதிமுக தலைவர் ஜெயலலிதா குறித்தும், அதிமுக குறித்தும் அவதூறாக பேசியதால் திமுக எம்.பி.திருச்சி சிவாவை தான் நான்கு முறை அறைந்ததாக அதிமுக பெண் எம்.பி.சசிகலா புஷ்பா கூறினார்.
இது குறித்து கூறிய திருச்சி சிவா தனக்கு ஒரு அறை மட்டுமே விழுந்ததாகவும், தான் சசிகலா புஷ்பாவை திரும்ப தாக்கவில்லை எனவும், சசிகலா புஷ்பா ஏன் அறைந்தார் என்ற காரணம் தெரியவில்லை எனவும் கூறியிருந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த தன்னிலை விளக்கம் அளிக்குமாறு திருச்சி சிவாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த திருச்சி சிவா நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.
மேலும் சசிகலா புஷ்பாவுக்கும் இந்த சம்பவம் குறித்து நேரில் விளக்கமளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்ததாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Labels:
News
,
other
No comments :
Post a Comment