தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
உருளைக்கிழங்கு-1
பீன்ஸ்-50கிராம்
காரட்-50கிராம்
பட்டாணி-50கிராம்
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
Step 1
அரைக்க வேண்டிய பொருட்கள்: பச்சை மிளகாய்-5 தேங்காய்துருவல்-கால்மூடி கசகசா-அரை டீஸ்பூன் சோம்பு-1டேபிள்ஸ்பூன்
Step 2
தாளிக்க வேண்டிய பொருட்கள்: கிராம்பு -3 பட்டை -2 ஏலக்காய்-1 எண்ணெய்-தேவையான அளவு
Step 3
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு காரட்,பீன்ஸ்,பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.
Step 4
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய், போட்டு தாளித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் உற்றி கொதிக்க விடவும்.
பின்பு வேக வைத்த காய்களையும்,உப்பு அதில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ சுவையான வெஜிடபிள் குருமா ரெடி.

No comments:
Post a Comment