சிரஞ்சீவியின் 150 -வது படத்தின் நாயகியான காஜல் அகர்வால்
கடைசியில் சிரஞ்சீவி படத்தின் நாயகி யார் என்பதை முடிவு செய்துவிட்டனர். மகன் ராம் சரண் தேஜாவுடன் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால்தான், தந்தை சிரஞ்சீவியின் 150 -வது படத்தின் நாயகி.
சிரஞ்சீவி தனது 150 -வது படத்தின் கதைக்காக பல வருடங்கள் காத்திருந்தார். கடைசியில் எந்தக் கதையும் கிடைக்காமல் தமிழில் வெளியான கத்தி படத்தின் ரீமேக்கில் நடிப்பது என்று முடிவு செய்தார். அடுத்தப் பிரச்சனை நாயகி.
அனுஷ்கா, நயன்தாரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்று பல நடிகைகளை முயன்று கடைசியில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர். காஜலுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டம் அள்ளிக் கொண்டு போகிறது. அஜித்தின் புதிய படத்தில் நாயகியாகியிருக்கும் அவர் இப்போது சிரஞ்சீவி படத்திலும் நாயகியாகியிருக்கிறார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment