வீடியோ: 1000 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி மாலை மாற்றிய அபூர்வ மணமக்கள்
மராட்டிய மாநிலத்தில் சுமார் ஆயிரம் அடி பள்ளத்தாக்கின் மீது கயிற்றில் தொங்கியபடி அந்தரத்தில் மாலை மாற்றிய அபூர்வ மணமக்களின் திருமண வீடியோ வெளியாகியுள்ளது.
மும்பை: மராட்டிய மாநிலத்தில் சுமார் ஆயிரம் அடி பள்ளத்தாக்கின் மீது கயிற்றில் தொங்கியபடி அந்தரத்தில் மாலை மாற்றிய அபூர்வ மணமக்களின் திருமண வீடியோ வெளியாகியுள்ளது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பொன்மொழிகளின் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், திருமணங்கள் அந்தரத்தில் நடத்தப்படும் புதுமொழியை மராட்டிய மாநிலத்தை மணமக்கள் ஏற்படுத்தியுள்ளனர். மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த மணமகன் ஒரு மலையேற்ற வீரர்.
தனது திருமணத்தை வித்தியாசமாகவும், அசத்தலாகவும் நடத்த தீர்மானித்த அவர், இந்த முடிவை தனது வருங்கால வாழ்க்கை துணையிடம் தெரிவிக்க அவரும் ’திரில்’ மற்றும் ‘தில்’லுடன் இதற்கு சம்மதித்தார்.
இதையடுத்து, கோலாப்பூர் மாவட்டம், பவன் ஹிந்த் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கின் மீது சுமார் ஆயிரம் அடி உயரத்தில் கயிற்றில் தொங்கியபடி மணமகனும், மணமகளும் இல்வாழ்க்கையில் தம்பதியராக அடியெடுத்து வைத்தனர்.
இந்த திருமணத்தை நடத்திவைத்த புரோகிதரும் கயிற்றில் தொங்கியபடி மந்திரம் ஓதி, அட்சதை தூவியது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
others
No comments :
Post a Comment