OpenShiftஎனும் இணைய பயன்பாடு ஒரு அறிமுகம்

Share this :
No comments




இந்த OpenShift என்பது ஒரு சேவைதளமாகும்(Platfaorm as a Service (PaaS))இது பயன்பாட்டு மேம்படுத்துநர்களை தத்தமது பயன்பாடுகளை மேககணினி சூழலில் மேம்படுத்தி விரிவாக்கம் செய்து வழங்க அனுமதிக்கின்றது மேலும் இது மேம்படுத்துநர்களையும் பொறியாளர்களையும் இணையத்தில் நேரடியாக அலுவலக வளாகத்தில் தத்தமது செயல்திட்டங்களை உருவாக்கிட வாய்ப்புகளை வழங்கதயாராக இருக்கின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் https://www.openshift.com// எனும் இந்த தளத்திற்கு சென்று நமக்கென தனியாக கட்டணமற்ற கணக்கினை துவங்குக
7

பின்னர் https://developers/openshift.com.en/manageing-client-tools.html/ எனும் தளத்திலிருந்து வாடிக்கையாளர் கருவிகளை பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க. பின்னர் HTML,CSS,Python ஆகிய அடிப்படை இணையதொழிலநுட்ப விவரங்கள் நமக்கு நன்கு தெரியுமா என உறுதிபடுத்திகொள்க அதன் பின்னர் https://www.openshift.redhat.com/ எனும் தளத்தில் உள்நுழைவு செய்திடுக அங்கு நமக்கு ஒவ்வொன்றும் 1 ஜிபி நினைவக கொள்ளளவு கொண்ட மூன்று பற்சக்கரம்(Gears) போன்ற நம்முடைய மென்பொருள் செயல்திட்டத்திற்கான இடவசதி அனுமதிக்கப் பட்டிருப்பதை காணலாம் மேலும் Cartridge Python,PHP,node.js, Rubyபோன்றவைகளை பயன்படுத்திகொள்வதற்கான வசதியும் ஒதுக்கபட்டிருப்பதை காணலாம். பின்னர் இந்த OpenShift எனும் தளத்தில் நம்முடைய புதிய இணைய பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்காகCreate your first application now எனும் இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் அடுத்தபக்கத்தில் பிரதிபலிக்கும் பட்டியலில் Python2.7 என்பதை தெரிவுசெய்துகொள்க. அடுத்ததாகதோன்றிடும் பக்கத்தில் configure the application எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் create applicationஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் பல்வேறு வாய்ப்புகளை அதனதன் பக்கங்களில் தெரிவுசெய்து செயல்படுத்திகொள்க அதனை தொடர்ந்து அனைத்து பயன்பாடுகளும் rhcloud.com என்பதன்கீழ் அடுக்கபட்டிருப்பதை காணலாம் அதில் flaskdemo என்பது உள்ளதாவென உறுதிபடுத்திகொள்க பின்னர் Application setting எனும் பக்கத்தில் git clone flaskdemo குறிமுறையை உள்ளீடு செய்திடுக உடன் requirements.txt ,setup.py ,wsgi.py ஆகிய மூன்று கோப்புகள் உருவாகியிருக்கும் பின்னர்
#!/usr/bin/python
import os
virtenv = os.environ[‘OPENSHIF_TPYTHON_DIR’] + ‘/virtenv/’
virtenv = os.path.join(virtenv, ‘bin/activeate_this.py’)
try;
excelfile(virtualenv, dic(_file_=virtualenv))
except IOError:
passwords
from FlaskDemo import app as application
ஆகிய குறிமுறைவரிகளின் வாயிலாக wsgi.py எனும் மாதிரிபலக உள்ளடக்கத்தை பதிலீடு செய்து கொள்க அதன்பின்னர் FlaskDemo.py எனும் கோப்பினை உருவாக்கி பின்வரும் குறிமுறைவரிகளை தட்டச்சு செய்துகொள்க
from flask import Flask
app = Flask(_name_)
@app.route(“/”)
def home();
return “
அனைவருக்கும வணக்கம்

if name == “_main_”:
app.run(debug=True)
பின்னர் பின்வரும் கட்டளைவரிவாயிலாக setup.py எனும் கோப்பினை நிறுவுகை செய்துகொள்க
# install_requires=[],
அதன்பின்னர் பின்வரும் கட்டளைவரிகளை மேலே உள்ள கட்டளை வரிக்கு பதிலாக தட்டச்சு செய்திடுக
# install_requires=[‘Flask==0.7.2’, ‘Markupsafe’]
பின்னர் பின்வரும் கட்டளைவரிகளின் வாயிலாக மாறுதல்களை OpenShift இற்குகொண்டுசெல்க
#git add
# git commit -m “Intial commit for FlaskDemo app”
# git push origin master
இதனை நம்முடைய Flask பயன்பாட்டினை இதற்கான இணையமுகவரியில் நிறுவுகை செய்திடுக

No comments :

Post a Comment