சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்

Share this :
No comments
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு இந்த ஒட்ஸ் வெண்பொங்கல். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள் : 

ஒட்ஸ் - 1 கப் 

பாசிப்பருப்பு - 1/2 கப் 

உப்பு - தேவைக்கு 

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை  

தாளிக்க : 

மிளகு - 1/2 டீஸ்பூன் 

சீரகம் - 1 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 

இஞ்சி -1 சிறுதுண்டு 

முந்திரி - தேவைக்கு 

நெய் - 1 டேபிள்ஸ்பூன் 

எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்  

செய்முறை : 

* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். 

* ஓட்சை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். 

* பாசிப்பருப்பை 1 1/2 கப் நீர்விட்டு மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும். 

* வெந்ததும் அதில் உப்பு, ஒட்ஸை போட்டு 8 நிமிடம் வேகவைத்து இறக்கவும். 

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறவும். 

* சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல் ரெடி.  

குறிப்பு : பாசிப்பருப்பு வேகவைக்கும் நேரம் தவிர மற்றபடி இந்த ஒட்ஸ் பொங்கல் செய்வதற்க்கு ரொம்ப ஈஸி. சுவையும் நன்றாக இருக்கும்.

No comments :

Post a Comment