பூஜையுடன் தொடங்கியது பி.வாசு இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படம்

Share this :
No comments


கத்திச்சண்டை படத்தில் காமெடியனாக நடிப்பதன் மூலம், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற தனது சபதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார் வடிவேலு. அடுத்து அவர் காமெடியனாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பி.வாசு கன்னடத்தில் இயக்கிய சிவலிங்கா படம் வெற்றி பெற்றதும், அதனை சந்திரமுகி இரண்டாம் பாகமாக ரஜினியை வைத்து தமிழில் ரீமேக் செய்ய முயற்சி செய்ததும் தமிழகம் அறிந்த செய்தி. ரஜினி சந்திரமுகி 2 திட்டத்தை மறுத்ததால் சிவலிங்காவை அதே பெயரில் தமிழில் லாரன்சை வைத்து இயக்க முடிவு செய்தார்.

நாயகி ரித்திகா சிங். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.

இதன் பூஜை சென்னையில் எளிமையாக நடந்தது. இந்தப் படத்தில் பி.வாசுவின் மகன் சக்தி முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

No comments :

Post a Comment