ஐதராபாத்தில் என்ஜினியரிங் கல்லூரி மாணவன் குடிபோதையில் காரை ஓட்டிவந்து ஏற்படுத்திய விபத்தில் மூளைச்சாவு அடைந்த பத்து வயது சிறுமி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் என்ஜினியரிங் கல்லூரி மாணவன் குடிபோதையில் காரை ஓட்டிவந்து ஏற்படுத்திய விபத்தில் மூளைச்சாவு அடைந்த பத்து வயது சிறுமி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
ஐதராபாத் நகரை சேர்ந்த பத்து வயது சிறுமி ரம்யா, முழு ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட ஜூலை முதல் தேதியன்று தனது பள்ளிக்கு தந்தையுடன் சென்றார்.
மாலையில் ரம்யாவின் தாயார், தாத்தா மற்றும் அவரது 2 மாமா பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். முதல்நாள் வகுப்பில் நடந்த அனுபவங்கள் தந்த மகிழ்ச்சியுடன் காரில் ஏறி அமர்ந்தார்.
பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டை நோக்கி அவர்களின் கார் சென்றபோது, எதிர்திசையில் படுவேகமாக வந்த மற்றொரு கார் பலமாக மோதியது. இந்த விபத்தில் ரம்யாவின் உறவினர் ஒருவர் உயிரிழந்தார். ரம்யாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ரம்யா மூளைச்சாவு (கோமா) நிலையை அடைந்துவிட்டதாகவும், எந்த நேரத்திலும் உயிரிழக்க நேரிடலாம் என்றும் டாக்டர்கள் கூறினர்.
செயற்கை சுவாசம் உதவியுடன் மருத்துவமனையில் ஒருவாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த ரம்யா நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்,
இதற்கிடையே, இந்த விபத்தை ஏற்படுத்திய என்ஜினியரிங் மாணவன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தனது காரை அதிவேகமாக ஓட்டியதாக போலீஸ் சோதனையில் தெரியவந்தது. ஓட்டுனர் உரிமம் கூட இல்லாமல் காரை ஓட்டிவந்த அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.
No comments:
Post a Comment