ஞானம் எப்போது பிறக்கிறது ?

Share this :
No comments

” ஞானம் எப்போது பிறக்கிறது?”

” எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம். குரு, சாகும் தருவாயில் படுத்திருந்தார்.

‘ ஐயா, கடைசியாக எனக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?’ என்று கேட்டான் சீடன். குரு வாயைட் திறந்து காட்டி, ‘ நாக்கு இருக்கிறதா?’ என்றார்.

‘இருக்கிறது ‘ என்றான், ‘ பற்கள்?’ ‘ இல்லை! ‘. குரு கேட்டார்,’ காரணம் தெரிகிறதா?’ ‘ தெரிகிறது குருவே!

நாக்கு மென்மையானது. அதனால் இன்னும் இருக்கிறது. பற்கள் கடினமானது. அதனால் உதிர்ந்துவிட்டன!’ ‘ உனக்கு ஞானம் வந்துவிட்டது’ என்றார் குரு!

No comments :

Post a Comment