கருணாகரன் கதாநாயகனாகும் பொது நலன் கருதி

Share this :
No comments


கருணாகரன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் நேற்று தொடங்கியது. நகைச்சுவை நடிகர் கருணாகரனுக்கு காமெடி வேடங்களைப் போலவே கதாநாயகன் வேடங்களும் தேடி வருகின்றன.

அறிமுக இயக்குனர் சீயோன் சொன்ன கதை பிடித்துப் போக கருணாகரன் நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்ட படம், பொது நலன் கருதி.

கருணாகரனுடன் ஆதித், சந்தோஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். கிராமத்திலிருந்து பிழைப்புக்காக சென்னை வரும் இந்த மூவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைதான் படம்.

இன்று பொதுநலன் என்பது சிலரது சுயநலம் சார்ந்தே இருப்பதை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப் போகிறாராம் இயக்குனர். அனு சித்தாரா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். நேற்று இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

No comments :

Post a Comment