(முட்டையில்லாத‌) குங்குமப்பூ குக்கீஸ்

Share this :
No comments

தேவையான பொருட்கள்:

1/2 கப் சாதா மாவு / மைதா

3 டீஸ்பூன் உப்பிலாத மிருதுவான வெண்ணெய்,

4 டீஸ்பூன் பவுடராக்கிய சர்க்கரை

ஒரு சிட்டிகை குங்குமப்பூ இழைகள்

1/4 தேக்கரண்டி ஏலக்காய்

1 டீஸ்பூன் பால்

5 பாதாம் துண்டுகளாக்கியது, அழகுபடுத்த

தயாரிப்பு நேரம்: 10 நிமிடங்கள்
சமையல் நேரம்: 20 நிமிடங்கள்

செய்முறை:

ஒரு கப் சூடான பாலில் குங்குமப்பூவை ஊற வைத்து ந‌ன்கு நசுக்கிக் கொண்டு தனியே வைத்துக் கொள்ளவும்.

நுண்ணலை அடுப்பை 180 டிகிரி சி ல் வைத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் மிருதுவான வெண்ணெய் மற்றும் பவுடராக்கிய‌ சர்க்கரை 

சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதில் குங்குமப்பூ பாலை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இப்போது மைதா மாவு மற்றும் ஏலக்காய் பொடியை வெண்ணெய் கலவையுடன் சேர்த்து எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

இந்த மாவு கலவையை 10 உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, உங்கள் உள்ளங்கைகளால் சமமாக தட்டையாக குக்கீஸ் வடிவத்திற்கு அழுத்திக் கொள்ளவும்.

சுமார் 1 அங்குல இடைவெளியில் சிறிது எண்ணெய் தடவப்பட்ட பேக்கிங் தட்டில் இவற்றை வைக்கவும்.

இதன் மீது பாதாமை தூவி குக்கீஸ்களை அழகுபடுத்தவும்.

80 டிகிரி சி ல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நுண்ணலை அடுப்பிப் வைக்கவும்.

நுணணலை அடுப்பில் இருந்து இவற்றை வெளியே எடுத்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆற விடவும். பின்னர் இவற்றை ஒரு கம்பி ரேக்கில் வைத்து ஆற விடவும்.

வெளியே எடுத்தவுடன் இது மென்மையாக இருக்கும், ஆனால் இதை நன்கு 
ஆறிய பிறகு பயன்படுத்துவது நன்றாக இருக்கும்.

இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

No comments :

Post a Comment