அம்மாயி வரலட்சுமியுடன் நடிக்கும் பொம்மாயி பூர்ணா

Share this :
No comments


முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமான பூர்ணா குறுகிய காலத்தில், சின்ன அசின் என்ற பட்டத்தை இளைய தளபதி விஜய்யிடமிருந்து பெற்றார்.

ஆனால், பட்டம் கிடைத்ததே தவிர நல்ல படங்கள் அமையவில்லை. தமிழ் சினிமாவில் காணாமல் போனார் பூர்ணா.

பாரதியின் வாக்குப்படி காண்பதெல்லாம் மறையும் என்றால் மறைந்ததெல்லாம் காண்போம் அல்லவா. பூர்ணாவையும் இப்போது படங்களில் காண முடிகிறது. வரலட்சுமி நடிக்கும் அம்மாயி படத்தில் பூர்ணாவும் கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார். இது தவிர சவரக்கத்தி, மணல் கயிறு 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றனார்.

சின்ன அசின் இந்தமுறை ஒரு ரவுண்ட் வருவார் போலிருக்கிறது.

No comments :

Post a Comment