செல்பி எடுத்த மாணவர் ரெயில் மோதி பலி
தண்டவாளத்தில் செல்பி எடுக்க சென்ற மாணவர் ரெயில் மோதி பலி ஆகி உள்ளார்.
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் நெரவாடா மெட்டா பகுதியைச் சேர்ந்தவர் சபீர்பாஷாவின் மகன் இத்தூருஸ் பாட்சா (20) என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இவர் ரெயில் வேகமாக செல்லும்போது அதன் அருகே நின்று செல்பி எடுக்க விரும்பினார். தனது நண்பர் ஹரிஸ்சுடன் கல்லூரி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு சென்றார். அங்கு இருவரும் ரெயில் வரும் சமயத்தில் ஒன்றாக நின்று செல்பி எடுக்க முடிவு செய்தனர்.
அப்போது வேகமாக ஒரு ரயில் வந்துகொண்டிருந்தது. இதை பார்த்த இருவரும் செல்பி எடுக்க தயாரானார்கள். ஆனால் அவர்கள் செல்பி எடுப்பதற்குள் ரெயில் அருகே வந்து விட்டது. சுதாரித்துக் கொண்ட ஹரிஸ் தண்டவாளத்தில் இருந்து ஒதுங்கினார். ஆனால் இத்தூருஸ் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment