'கபாலி' பேக்கேஜ் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய யுக்தி
ஏர்ஏசியா செய்த விளம்பரத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், ரசிகர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் 'கபாலி' பேக்கேஜ் அறிவித்து உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் குறிப்பாகத் தென் இந்தியாவில் ரஜினிகாந்த் ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகம், இதே வேளையில் தென் இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு. இந்த வித்தியாசத்தைச் சீர்ப்படுத்த ஏர்டெல் நிறுவனம் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் 'கபாலி' பேக்கேஜ்.
இந்தக் கபாலி பேக்கேஜில் அன்லிமிடெட் 2ஜி டேட்டா, கபாலி காலர் டியூன், கபாலி பட போஸ்டர் இருக்கும் கவரில் சிம்கார்டு என ஏர்டெல் நிறுவனம் ரசிகர்களைக் கவர்வதில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தியுள்ளது.
கபாலி பேக்கேஜில் வாடிக்கையாளர்கள் 5 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஒரு மணிநேரத்திற்கு அனிலிமிடெட் டேட்டா வழங்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது. இதனுடன் கபாலி திரைப்படத்தின் இரண்டு புகைப்படமும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தச் சிம்கார்டு வாங்குவோர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ நேரடியாக வாழ்த்தும் எஸ்எம்எஸ் சேனல் வசதிகளை ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment