கொள்கை அடிப்படையில் கட்சிகளை வளர்த்து மக்களிடம் செல்வாக்கு பெற்று தேர்தலை சந்திப்பது கட்சிகளின் வழக்கம். எந்த கட்சியாக இருந்தாலும் குறைந்த பட்சம் ஏதாவது ஒரு கொள்கை இருக்கும்.
திராவிடம், மார்க்சிஸம், காந்தியிசம் என ஏதாவது ஒரு கொள்கைகளை கட்சிகள் கொண்டிருக்கும். ஆனால் தற்போது சில கட்சிகள் எந்த கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன என்பதே மக்களுக்கு புரியவில்லை.
மக்களுக்கு புரிவது ஒரு பக்கம் இருக்கட்டும், கட்சியை வைத்து நடத்துபவர்களுக்காவது தங்கள் கட்சியின் கொள்கை என்னவென்று தெரியுமா என்பது சந்தேகமே.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமாரின் அவரது கட்சியின் கொள்கை என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சரத்குமார், ஆளும் அதிமுகவுடன் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டும்தான் தங்கள் கொள்கை என கூறினார்.
சரத்குமார் எப்பொழுதுமே அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பார். ஆனால் அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பதையே தனது கட்சியின் கொள்கையாக கொண்டிருப்பார் என எதிர்பார்க்கவில்லை என்று சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment