பிறந்தநாள்... ரசிகர்களை சந்தித்து குஷிப்படுத்திய சூர்யா
நடிகர் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். கடந்த இரு பிறந்தநாள்களை வெளியிடங்களில் கொண்டாடிய சூர்யா இந்தமுறை சென்னையில் இருந்;ததால் குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடினார்.
சூர்யாவின் ரசிகர்கள் அவரது கடந்த சில படங்களால் அப்செட்டாகியுள்ளனர். அவர்களை குஷிப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. ரசிகர்களை அவ்வளவாக சந்திக்காத சூர்யா நேற்று மாலை சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளும் அதில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் நேரடியாக பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார் சூர்யா. மேலும் ரசிகர்கள் செய்துவரும் பல்வேறு நற்பணிகளுக்காக அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
இன்று சூர்யாவின் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் ரத்ததானம், அன்னதானம் என்று சூர்யாவின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment