Tuesday, July 26, 2016

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி


குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு சாதத்தை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 200 கிராம்

பச்சை மிளகாய் - 3

சாதம் - 1 கப் உதிரியாக வடித்தது

பட்டை - 1 சிறிய துண்டு

லவங்கம் - 2

ஏலக்காய் - 2

மஞ்சள் தூள் - சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் - 2

உப்பு - தேவைகேற்ப

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வந்ததும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.

* இப்போது உதிரியாக வடித்த சாதத்தை போட்டு நன்றாக கிளறி மூடி வைத்து மிதமான தீயில் 8 நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.

* சுவையான உருளைக்கிழங்கு சாதம் ரெடி.

No comments:

Post a Comment