பிரெஞ்சு தாடி பார்த்திபனின் திட்டம் போட்டு திருடுற கூட்டம் பிரெஞ்சு தாடி பார்த்திபனின் திட்டம் போ
வித்தியாசமான வில்லன் வேடமா? நெஞ்சைத் தொடும் குணச்சித்திரமா? பார்த்திபனுக்கு போனை போடு என்கிற அளவுக்கு இருக்கிறது நிலைமை.
நானும் ரௌடிதான் வெற்றிக்குப் பிறகு மனிதர் நடிப்பில் பிஸியோ பிஸி. அவர் நடிக்கும் புதிய படம், திட்டம் போட்டு திருடுற கூட்டம்.
கயல் சந்திரன் நாயகனாகவும், சாத்னா டைட்டஸ் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், பிரெஞ்ச் தாடியுடன் பார்த்திபன் நடிக்கிறார். வித்தியாசம் கெட்டப்பில் மட்டுமில்லை கேரக்டரிலும்தானாம்.
படத்தை சுதர் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். பார்த்திபனின் கதாபாத்திரம் குறித்து சொன்னதும், அவரே அவருக்கான கெட்டப்பை யோசித்து அதன்படி மேக்கப் போட்டு வந்து அசத்தியிருக்கிறார்.
திரையில் ரசிகர்களையும் அசத்துங்க.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment