தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி

Share this :
No comments
சுட்டீஸ்களுக்கான சத்தான உணவுகளில் எள்ளு உருண்டை மிகவும் எனர்ஜி தரக்கூடியது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள் : 

 எள்ளு - 200 கிராம், 

வெல்லம் - 200 கிராம், 

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, 

நெய் - 3 டீஸ்பூன். 

செய்முறை: * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். 

 * வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டிய பின் மீண்டும் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு பாகை விட்டு, உருட்டினால் உருட்ட வர வேண்டும். அதுதான் பாகுக்கு சரியான பதம்). 

 * பதம் வந்ததும் வறுத்த எள்ளுடன் பாகு சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, சற்று சூடாக இருக்கும் போதே கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு உருட்டவும். 

* சுவையான தித்திப்பான எள்ளு உருண்டை ரெடி. 

குறிப்பு: வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு எள் மிகவும் நல்லது. இதை கருப்பு எள், வெள்ளை எள் இரண்டிலும் செய்யலாம்.

No comments :

Post a Comment