Monday, July 11, 2016

மகள் திருமணத்திற்கு முதல்வரை நேரில் சென்று அழைத்த ராதிகா, சரத்குமார்



ராதிகாவின் மகள் ரேயானுக்கும், இளம் கிரிக்கெட் வீரர், கர்நாடகாவைச் சேர்ந்த அபிமன்யூ மிதுனுக்கும் சென்ற செப்டம்பர் மாதம் 23 -ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்கள் இருவரது திருமணமும் விரைவில் நடைபெற உள்ளதால், ராதிகா தனது கணவர் சரத்குமார் சகிதம் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்து திருமணத்துக்கு வரும்படி அழைப்பிதழ் அளித்தார்.

அபிமன்யூ மிதுன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ரேயான் ராதிகாவின் ராடான் நிறுவனத்தின் துணைத்தலைவராக உள்ளார்.

No comments:

Post a Comment